வட்டங்கள்- புகைப்படப்போட்டிக்கு
வணக்கம், ஏற்கனவே போட்டி களைகட்டிடுச்சி, வந்திருக்கும் படங்கள் நடுவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கப்போவது நிச்சயம், வாழ்த்துககள் :-).
வட்டம் தலைப்பை ஒட்டி ஏற்கனவே எடுத்த படங்களில் தேடிய போது ஒன்று இரண்டு இருந்தாலும் , புதிதாக எடுப்பது என்று முடிவு செய்து கேமராவை தூக்கி வட்டங்களை தேடி ஒரு பெரிய வட்டம் அடிச்சாச்சு. ஒரு சில படங்கள் எடுக்க முடியாமல் போயிற்று, இங்கே கொஞ்சம் தொலைவில் இருக்கும் பஞ்சர் கடை வெளியில் மரத்தில்தொங்கும் பழைய டயர்களை எடுக்க நினைத்து முடியாமல் போனது, அதே போல் "பானைகளின் வாய்" எப்பொழுதோ புகை படத்தில் பார்த்தது அந்த கலர் பிடித்தது அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து பானை கிடைக்காமல் தள்ளிப்போனது. வீட்டிற்க்கு வெளியே கொட்டாங்கச்சிகளைப் பார்த்ததும் அதே வண்ணம் போல் தோன்றியது, தண்ணீரில் நனைத்து எடுத்த படம்.
1.
இந்த படம் ஏற்கனவே எடுத்தது. கொஞ்சம் crop செய்து, பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. செலக்டிவ் கலரிங் முறையில் வட்டங்கள் மட்டும் வண்ணத்தில் தெரியும்படி ஜிம்ப்-பில் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.
2.
shuttle badminton எனக்கு பிடித்த விளையாட்டு, அந்த மட்டைகளை வைத்து ஒரு சில கிளிக்குகள் எடுத்ததில் இந்த படம் தேறியது.
3.
ஒட்டு மொத்த படங்களில் எதை அனுப்பவது என்பதில் குழப்பம் இருந்தது ஆனாலும் இந்த கொட்டங்கச்சி படங்களில் எதை அனுப்பவது என்பதில் பெரிய குழப்பம்
4.
எந்த படங்களை அனுப்புவது என்பதில் வந்து போறவங்க கருத்து சொல்லாமே, உங்களுக்கு பிடிச்ச படங்களை சொல்லிட்டு போங்க
31 comments:
bat and last photo நல்லாருக்கு... பேட் என்ன யாராச்சும் பிடிச்சிக்கிட்டாங்களா.. சுவர் தானே பேக்கரவுண்டில் தெரிவது ??
நன்றி @ முத்துலெட்சுமி. யாரும் பிடிக்கல , சுவர்ல ஒரு பேட், இரண்டு பக்கமும் நாற்காலி வைத்து, மத்த ரெண்டு பேட் வைத்து எடுத்தேன்.
முதல் கொட்டாங்குச்சி படமும் பேட்மிண்டன் ரேக்கட்டும் அருமையா இருக்குதுங்க. வாழ்த்துகள்.
:)
நன்றி @ கைப்புள்ள. வருகைக்கும் , கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும்.
எல்லாப்படங்களும் ரொம்ப நல்லாயிருக்குங்க.எனக்குப் பிடிச்சதுன்னா முதலும் மூணாவதும் தான்.... :)
நன்றி @ ரிஷான், வருகைக்கும், கருத்துக்கும்.
உங்க படத்துக்குத்தான் வெய்ட்டிங். லைட்டிங்ல பூந்து விளையாடீர்ரீங்க. கொட்டங்குச்சியும் லைட்டிங்கும் சூப்பர்
ஆனா அந்த பெயிண்ட் டப்பால சார்ப்னஸ் கம்மியா தெரியற மாதீரி இருக்கு புல்ஸ்க்ரீன்ல. இல்ல எனக்கு பிரம்மையான்னு தெரில.
நன்றி @ நந்து f/o நிலா
//உங்க படத்துக்குத்தான் வெய்ட்டிங்.//
புரியுது, பார்த்திட்டு எல்லா படத்தையும் விட சிறப்பா போட்றதுக்கா, உங்க படத்துக்கு நாங்களும் வெய்ட்டிங்.
//ஆனா அந்த பெயிண்ட் டப்பால சார்ப்னஸ் கம்மியா தெரியற மாதீரி இருக்கு புல்ஸ்க்ரீன்ல. இல்ல எனக்கு பிரம்மையான்னு தெரில.//
உண்மைதான், low lightல எடுத்தது tripod இல்லை ISO அதிகமா வச்சி எடுத்தும் shake வந்திடுச்சி, ஆன பாருங்க அந்த படம்தான் வண்ணங்கள் போட்டியில முதல் இடம் வாங்குச்சு, இங்க crop செய்து pp செய்து போட்டிருக்கேன்.
ஒப்பாரி சார் ஒரு வவ்வால் மாட்டுச்சு. வளச்சு வளச்சு படம் எடுதுட்டேன், சாம்பிள்ஸ் போட்டிருக்கேன். போட்டிக்கு ஆவுமான்னு டைமிருந்தா கொஞ்சம் பாத்து சொல்லுங்க
http://nandhu1.blogspot.com/2008/02/blog-post.html
மூன்றாவது நன்றாகவிருக்கின்றது
நன்றி @ பெயரிலி. உங்கள் கருத்துக்கள் படங்களை தேர்வு செய்வதில் உதவியாய் இருக்கும்.
கொட்டாங்குச்சி idea super... எல்லாப்படங்களும் நல்லாயிருக்குங்க ;)
வாழ்த்துக்கள் !!!
நன்றி @ நாதஸ்.
கடைசீ இரண்டும் ரொம்ப நல்ல இருக்கு. அதுலயும் கடைசி கொட்டாங்கச்சி ரொம்ப அழகு.
நன்றி @ சத்தியா.
2 & 4 எனக்குப் பிடிச்சிருக்கு.
வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி @ துளசிகோபால்.
அட போங்க சார் .. எல்லா படமுமே நல்லா இருக்குது.
என்ன, உங்க படங்களைப் பார்த்துட்டு இப்ப எல்லாம் கேமிரா பொட்டியைத் தூக்கவே மூடு வரமாட்டேங்குது.
//அட போங்க சார் .. எல்லா படமுமே நல்லா இருக்குது.
என்ன, உங்க படங்களைப் பார்த்துட்டு இப்ப எல்லாம் கேமிரா பொட்டியைத் தூக்கவே மூடு வரமாட்டேங்குது.//
நன்றி தருமி சார்,
ஒரு நல்ல படம் அடுத்தவங்களை படம் எடுக்க தூண்டனும், உள்குத்து எதுவும் இல்லையே.
அனைத்து படங்களும் அழகு. கொட்டங்குச்சிகள் ரொம்ப ரொம்ப அழகு.
நன்றி @ சஞ்ஜை.
//ஒரு நல்ல படம் அடுத்தவங்களை படம் எடுக்க தூண்டணும்..//
நியாயந்தான். கொஞ்சமாவது அதுமாதிரி எடுக்க முடிஞ்சா மேற்கொண்டு முயற்சிக்கலாம். இல்லைன்னா ... என்னமோ போங்க..மூணாவது கண்ணு கொஞ்சம் நொள்ளை போலும் எனக்கு :(
அஹா கொட்டங்குச்சியா ....... ரொம்ப அழகா இருக்கு.....
//நியாயந்தான். கொஞ்சமாவது அதுமாதிரி எடுக்க முடிஞ்சா மேற்கொண்டு முயற்சிக்கலாம். இல்லைன்னா ... என்னமோ போங்க..மூணாவது கண்ணு கொஞ்சம் நொள்ளை போலும் எனக்கு :(//
சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க. இதை விட சிறப்பா எடுக்கிறவங்க இருக்காங்க , அதைப்பார்த்து நான் படம் எடுக்கிறதை விட்றவா, இது எப்பாவாச்சும் நடக்கும் கண்டுகாதீங்க.
நன்றி @ இல்லத்தரசி
வருகைக்கும் பாராட்டுக்கும்.
The first and the last are awesome. Good Luck.
expectation jaathi aayiduchunnu nenaikkkaren.
indha murai,edhirpaartha alavu varalai.
not up to the usual-mark :)
Thanks @ priya
Surveysan
//expectation jaathi aayiduchunnu nenaikkkaren.
indha murai,edhirpaartha alavu varalai.
not up to the usual-mark :)//
அப்படியா , தெரியலை என்னால இவ்வளவுதான் முடிஞ்சது. அடுத்த முறை எனக்கு திருப்தியான படங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுதான்னு பாக்கலாம்.:).
kalakkalaa irukku Oppaari.
Hi..
first time here.. unga padangal arumai.. yennoda padam unga fav nu nenaika sandhisama irukku .. Thanks..
ungaloda mudhal kotanguchu.. arumai... migavum arumai..
Thanks Athi, Thanks Kuttibalu.
Post a Comment