இரவு நேர புகைப்படங்கள் - PIT ஜூலை மாத போட்டிக்கு

வணக்கம்.

ஜூலை மாத போட்டிக்கு இரவு நேர புகைப்படங்கள் தலைப்பு கொடுத்திருக்காங்க, அநேகமாக எல்லாரும் முன்னரே முயற்சி செய்திருப்பார்கள் ஆனாலும் மாதிரிப்படங்கள் பிரமிப்பூட்டின. சரி மாதிரிப்படங்கள்தான் இப்படி என்றால் இது வரை வந்திருக்கும் படங்கள் இன்னும் ஆச்சர்யம், ஆனது ஆச்சு இப்படியே ஆச்சர்யப்பட்டு நின்னா நம்ம படம் இல்லாமலே போட்டி முடிஞ்சிரும் , அதான் வந்தாச்சு

முதல் படம்
திருவிழாவில் கரகாட்டத்தின் போது எடுத்தது. இந்த திருவிழாவை புகைப்பட ஆவணமாக எடுக்க முயற்சித்து சில படங்கள் எடுத்தேன், அதில் ஒன்று இந்த கரகாட்டப்படம்.

2. சிலம்பாட்டம்

அதே திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்.

3.மதுக்கோப்பை

போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, முழுஇருட்டில் ஒற்றை மெழுகுவர்த்தியின் துணை கொண்டு எடுத்தது
4. மதுவுடன் கோப்பை

இது PP special . படம் எடுத்த போது கோப்பையில் மது இல்லை பின்னர் போட்டோஷாப் துணை கொண்டு கோப்பையில் மது ஊற்றப்பட்டது.


படங்கள் பார்த்தாச்சா உங்களுக்கு பிடித்த படத்தையும் சொல்லிட்டு போங்க. போட்டிப்படத்தை தேர்வு செஞ்சாச்சு என்றாலும் சிறு குழப்பம் இருக்கு உங்க கருத்தையும் தெரிஞ்சிகனும்னு இருக்கேன்.

அப்புறம் நடுவர் குழுவிற்க்கு பாராட்டுக்கள், குறிப்பாக zoho creater அதிலிருக்கும் judges comments column இனி அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எதிர்பார்க்கலாம். நன்றி தீபா. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.