கருப்பு -வெள்ளை மார்ச் மாத பிட் போட்டிக்கு

வணக்கம்.

கருப்பு வெள்ளை படங்களை சக போட்டியாளர்கள் வெலுத்து வாங்குறாங்க , ஏற்கனவே அருமையான படங்கள் வந்துவிட்டன. உணர்வுகளை வெளிப்படுத்த கருப்பு வெள்ளை படங்கள் அருமையான் சாய்ஸ். இதோ முதல் படம் குழந்தைகள் எப்படி எடுத்தாலும் அழகுதான்
மகாபலிபுரம்- landscape கருப்பு. வெள்ளையில் எடுப்பது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போ டிஜிட்டலில் அது எளிதாகிவிட்டது. ஃப்லிம் காலத்தில் யோசித்து பாருங்கள் ஒரு காட்சியை கருப்பு வெள்ளையாகவே பார்த்து எடுத்திருப்பார்கள். நமக்கு அந்த பிரச்சனை இல்லை போட்டி அறிவிப்பாளர்களுக்கு நன்றி என்னுடைய படங்கள் சிலவற்றை கருப்பு வெள்ளையாக்கி பார்த்தேன் அதில் ஒன்று மகாபலிபுரம் லைட் ஹவுஸ்.


போட்டிப்படம் பெங்களுரில் எடுத்தது. இந்த படத்தை கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொண்டிருக்கும் பொழுது மிகவும் பிடித்து போய் அனுப்பியது. எதற்காக என்று கேட்டால் பதில் தெரியாது.