பிப்ரவரி - ஆக் ஷன்

வணக்கம்.

கொஞ்சம் இடைவெளி விழுந்திடுச்சி , மூன்று மாதமா பதிவே போட முடியாம போய்டுச்சி. திரும்பவும் போட்டிக்கு வந்தாச்சு இந்த தலைப்பில் நிறைய படங்கள் எடுத்திருந்தாலும் எனுக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு , கருத்து சொல்லிட்டுப் போங்க.

1. பெசன்ட் நகர் - நண்பர்களுடன் சென்ற போது கிளிக்கியது. இது ஒரு technique slow shutter speed வச்சிகிட்டு(1/15), flash-ம் ஆன் செய்து கிளிக் பண்ணவேண்டியதுதான் , முயன்று பாருங்கள்.

flash - நண்பர்களை நிலையாக பிடிக்க

slow shutter speed - நெருப்பு பொறிகளை மட்டும் action blur-ல படம் பிடிச்சிருக்கு.

புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், இதை விட அழகா விரைவில் பிட்-ல சொல்லுவாங்க2. ஆட்டம். சின்ன ஊர் திருவிழாவில் தெருவில் ஆட்டத்துடன் பறை இசைக்கும் முதிர்ந்த கலைஞர், அருமையாக ஆட்டத்துடன் வாசித்தார்


3. அதே திருவிழாவில் - சாமியாட்டம், சுவரின் பின்னால் மறைந்து நின்று எடுத்தது, விரல்களில் action blur தெரிந்தாலும் expressions அதை மீறி தெரிந்ததாலா
அடுத்த படம் போட்டிக்கு.

4. பேரூந்து -இந்த படம் சித்தார்தை படம் பிடிக்க பக்கதிலே ஒரு வயலுக்கு கூட்டிப்போன போது எடுத்தது. ரொம்ப தற்செயலா நடந்து பின்னர் , திட்டமிட்டு எடுத்தது.
shutter speed அதிகமா வெச்சி எடுத்து கொன்டிருந்த போது bus தற்செயலா full freeze - ல படத்தில வந்தது. பின்னர் இதை slow shutterla எடுக்கலாம்னு முயற்சி செஞ்சப்ப வால் சித்தார்த் நிலையா நிக்காம அவன் ஒரு blur கொடுக்க ஆரம்ப்பிச்சான். நிறைய கிளிக்ஸ்க்கு அப்புறம் இந்த படம் சாத்தியம் ஆனது.

இந்த படம் முழுக்க உண்மை , மேலே உள்ள படத்திற்க்கு முன் அதற்காக முயன்ற போது எடுத்த சில கிளிக்குகள் கிழே.