பூக்கள் - டிசம்பர் மாத போட்டிக்கு

பூக்கள், டிசம்பர் மாத போட்டிக்கு தலைப்பை பார்த்தவுடன் இந்த பூக்கள் ஞாபகம் வந்துவிட்டது பூக்களின் பெயர்கள் தெரியாது மஞ்சள் , ஆரஞ்சு நிறத்தில் பூக்கும் நான் தினமும் வழியில் பார்த்து புகைப்படம் எடுக்க நினைத்ததுன்டு , PIT மூலம் நிறைவேறியது பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது


முதல் படம் என் ஜீன்ஸ் பேன்ட் மீது வைத்து கொஞ்சம் வானமும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.


1.

நிறைய கிளிக்கியதில் தேறியவைகள் கிழே உள்ள படங்கள் எதை தேர்வு செய்வது என்பது தெரியலை யோசனை சொல்லுங்களேன்

2.

3.



4.



5.



6.

roads - நவம்பர் மாத போட்டிக்கு

நான் சாலைகளை அதிகம் எடுத்ததில்லை , புதுசா நிறைய பதிவர்கள் வந்து கலக்கியிருக்காங்க அவர்களின் படங்களின் தரத்திற்கு சான்று பதிவாசிரியர் செல்லாவே களம்மிறங்கியிருப்பது ;).மிக அழகான படங்களை காணமுடிகிறது அணைவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட முயற்சிகள்

புகைப்படம் 1 - Mr.Strong
சென்னையில் எடுக்கப்பட்டது, இரவு நேரம் , ஒரு பேரூந்து நிறுத்தத்தில்
எடுக்கப்பட்டது, பின்னர் செபியாவிற்கு மாற்றப்பட்டு கொஞ்சமாக பிற்தயாரிப்பு செய்யப்பட்டது.கடைசி படமும் எனக்கு பிடித்தது என்றாலும் நடுவில் வரும் வாகன ஒளி உறுத்தவே முதல் படத்தை தேர்வு செய்தேன்.

















புகைப்படம் 2-சைக்கிள்

கிராமத்து சாலையில் எடுத்தது. மாலை நேரம்.











சென்னை எழும்பூர், இரவு நேரம்.












Mr.Strong 2.















வாழ்த்துக்கள் .

அக்டோபர் மாத PIT போட்டிக்கு

அதிகமா யாரும் தொடத subject food photography தான்னு நினைக்கிறேன், எப்படியோ நான் அதிகமா எடுத்ததில்லை, இதுவரைக்கும் நடந்த போட்டிகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களைதான் அனுப்பியிருந்தேன் முதல் முறை போட்டிக்காக அறிவித்த பின் எடுத்த படங்கள் இவை.

இதுவரை வந்திருக்கிற படங்கள் மிரட்டுகின்றன, இப்பொழுதுதான் நிறைய பேர் வெளியே வர்ராங்க, போட்டி கடுமையாக இருக்கப்போகிறது. ஒரு சிலர் ஆசிரியர்கள் சொன்ன குறிப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி மிக அட்டகாசமான படங்களை எடுத்திருக்காங்க, உ.த.முட்டை மற்றும் அன்னாசி . இப்பதிவிற்க்கு முன் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் என் இந்த படங்களை எடுக்க உதவியாக இருந்தது cvr அவர்களுக்கு நன்றி.

சரி என்னோட படங்களை பார்ப்போம்,

எல்லோறும் சைவ உணவுகளாய் கொடுக்க எனுக்கு அசைவம் எடுத்து பார்க்கலாம் என்று நான் இவைகளை உண்ணும் போது தோன்றியது( அய்யோ நடுவர்கள் சைவமா? அசைவமா தெரியலயே?), ஒட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் சிறிது அலங்காறம் செய்யலாம் என்று எவர்சில்வர் தட்டுக்களை மாற்றி , கருவேப்பிலை தூவி " என்னாதான் செய்யுறான்னு?" அண்ணி விநோதமாக பார்க்க அவசரமாக சில கிளிக்குகள் எடுத்தாச்சு. வேறு சில யோசனைகள் இருந்த போதும் அவைகளை பிறகோர் சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

1.மீன் குழம்பு , சோறு மற்றும் வறுத்த மீன்


























2.வறுத்த மீன்


















mmmmmm ம்ம்ம்ம்ம் அப்புறம் என்ன? மீன் சுவையா இருந்தது.

போட்டியில் கலந்துகொண்டவர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

PIT September Contest _ colours

Sorry for posting in English.



Here is my pic for colours



onion1



ஆகஸ்ட் மாத புகைபடப்போட்டிக்கு - portraits


தமிழில் புகைப்படக்கலை - அறிவித்துள்ள இந்த மாத போட்டிக்கு ஏற்கனவே படங்கள் வந்து குவிந்துள்ளன, " சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு" ஏற்கனவே புலம்பியாச்சு, சரி இருக்கறத அனுப்புவோம்னு தேடினேன்.

portraits collection எல்லோர்கிட்டேயும் அதிகமா இருக்கும் படங்கள் இதுவாதான் இருக்கும் , எவ்வளவு வகைகள் இதுக்குள்ளே இருக்கு , children s, informal, formal. என்கிட்ட இருந்த படங்களை ஒருவழியா தேத்தி சுமாரான படங்களா ( அப்ப சூப்பரான படங்கள் ? அப்படி எதுவும் இல்லைன்னுதான் இந்த பில்டப்பு) சில படங்கள வரிசை படித்தினேன் இதிலே எது அனுப்பறதுன்னு பெரிய குழப்பம், எதோ இரண்டு படங்களை போட்டிக்குன்னு இங்க வச்சிருக்கேன்.

முதல் படம் very close shot, உணர்வுகளை மட்டும் பிராதானப்படுத்த செபியாவிற்க்கு பிக்காஸா மூலம் மாற்றப்பட்டுள்ளது. lighting கூட நல்ல இருக்கிறமாதிரி இருக்கு.

இரண்டாவது படம் எனக்கு பிடிக்க காரணம் expressions. lighting பிளாட்டா இருந்தாலும் வெகு இயல்பாய் இருந்ததால இந்த படம் செலக்ட் ஆச்சு.

இரண்டு படமும் childrens portraits வகையில் வந்திடிச்சி, குழந்தைகளை படம் பிடிக்கறது அவ்வளவு ஜாலியான விஷயம்.






என்னுடைய மற்ற படங்கள்


என்னுடைய நண்பன், அவனுடைய தாடிக்காக எடுத்தது, தாடிய மட்டும் பிராதனமாக காட்டனும்னு முயற்ச்சி.



















சும்மா பரிசோதனை முயற்ச்சி.



























எனக்கு பிடித்த படம். பெரிசா lighting இல்லை என்றாலும் expressions was good.





இன்னும் நிறைய படங்கள் இருக்கு, இன்னொரு பதிவில் பார்க்கலாம், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புகைப்படப்போட்டி - விடுபட்டவை

புகைப்படப்போட்டிக்கு விளம்பரம் தேவையில்லை , அதில் கலந்துகொள்வதே எனக்கு விளம்பரம்தான். பிட்டு போதும் விசயத்திற்க்கு வருவோம் போட்டியில் கலந்துக்கனும்னு முடிவு பன்னதும் ஏற்கனவே என்கிட்ட இருந்த புகைப்படங்களில் தேட ஆரம்பிச்சேன்.

எனக்கு ஒரளவுக்கு நல்லதா பட்டதை 4 படங்கள் தேர்வு செஞ்சேன், அதில் எதை அனுப்புவதுன்னு கொழம்பி கடைசியா போட்டிக்கு இந்த பதிவில் உள்ள படங்களை அனுப்பினேன் புகைப்படப்போட்டி - இயற்கை.

போட்டிக்கு அனுப்பியவை



விடுபட்டவை






இந்த இரண்டு படங்களை நான் தேர்வு செய்யாதிற்க்கு காரணம் நான் தேர்வு செய்த இரண்டு படங்களிலும் ஒரே கருப்பொருள் (subject .: either tree or sea) இருக்கக்கூடாது என்பதால்தான் .

நீங்க சொல்லுங்க எந்த படத்தை அனுப்பியிருக்கலாம்? ஏன்?

புகைப்படப்போட்டி - இயற்கை.

புகைப்படப்போட்டிக்கு என்னுடைய படங்கள்.






இந்த மாதிரி போட்டிகளுக்கு மட்டும் பதிவு எழுதுவதுன்னு ஆகிப்போச்சு.

மனிதமிருகம்

வருடந்தோரும் திருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் என்னை ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வாக கிடா பலியிடுதல் மற்றும் இரத்தம் குடித்தலும் இருக்கும். இந்நிகழ்வை பலமுறை புகைப்படம் எடுக்க நினைத்து முடியாமல் போனது. இந்தமுறை படம் பிடித்தாகிவிட்டது.

இவர் பெயர் சங்கர் எனக்கு தெரிந்து 12 வருடங்களாக இவர் காளியாக சாமியாடி வருகிறார், சற்றும் நினைத்து பார்க்க முடியாத செயல்களை செய்வது இவருடைய special எல்லோரும் தீ மிதிக்க இவர் ஒருமுறை தீயில் உருண்டு உடம்பெல்லாம் புண்ணாகியது. இவன் மனிதனா என்ற திகைக்க வைத்த ஒரு நிகழ்வு இங்கு புகைப்படமாக.1. பலிகிடா.

2. கிடா வெட்டப்பட்டவுடன் பாய்ந்து இரத்தம் குடிக்கும் காட்சி



3. முகத்தில் இரத்தம் தெரிக்க , கிடா மார்பில் உதைக்க பற்களால் தூக்கி கோயிலை சுற்றி வரும் போது.



4. முகத்தில் இரத்தம் தெரிக்க மயங்கி விழும் முன்னர்.

த வெ உ புகைப்படப்போட்டி. புகைப்படம் உருவான கதை.

முதலில் போட்டியை அறிவித்த சர்வேசன் அவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற ,நெல்லை சிவா, பெருசு மற்றும் அபர்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

புகைப்படம் எடுக்க கடைசி தினத்தன்று தான் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தேன், வெகு எளிதாகவே இந்த யோசனை சிக்கியது.
ஆணால் புகைப்படம் எடுப்பதில் வெகு சிரமப்பட்டேன். முதலில் முயற்சித்தபோது காய்கறிகள் தண்ணீரில் அமிழாமல் மிதந்தன. பிண்ணர் உருளையை வெட்டி , வெங்காயத்தை மிதக்க விட்டு, அதன் மேல் தக்காளியை மேலிருந்து எறிந்து என சில சோதனை(!)க்கிளிக்குகள் முடிந்தபின் லைட்டிங் பற்றி யோசித்து ஜன்னல் வெளிச்சத்தில் சில கிளிக்குகள்.

மீண்டும் திருப்தியில்லாமல் out door lighting சில கிளிக்குகள்.



Background appeal இல்லாமல் போனதால் என்னுடய நீல நிற சட்டையை பின்புறம் வைத்து சில கிளிக்குகள். ஒரு வழியாக முடித்த பின்னர் சிறந்ததாகப்பட்ட இரு படங்களை தேர்வு செய்து போட்டிக்கு கடைசி சில மணி நேரங்களில் அனுப்பிவைத்தால் அங்க வச்சாங்கையா........... ஆப்பு.






படம் நல்லாதான் இருக்கு ஆணால் போட்டி விதிமுறைகளின் படி தவெஉ தவிற எதுவும் இருக்கக்கூடாது ஆகையால் போட்டியில் சேர்க்க இயலாது - என்று திரு. சர்வேசன் பதில் மெயில் அனுப்பினார். ரொம்ப பீல் ஆயிட்டேன். சரி என்ன பன்றது சில மணி நேரங்களில் புதுசா எதுவும் நமக்கு எட்டாது அப்படின்னு முடிவுகட்டி எடுத்த படங்களை என்ன செய்யலாம்னு சோகமா பார்த்துகிட்டு இருந்தேன். சட்டுனு ஒரு யோசனை மின்னல் மாதிறி, இருக்கிற படதிலே crop பண்ணி கிளாஸை எடுத்திட்டா என்ன. வேகமா Crop பண்ணி அனுப்பி வெச்சேன். இந்த முறை "தொடர் முயற்சிகளின் பலனால் உங்கள் புகைப்படம் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது" அப்படின்னு பதில் மெயில் வந்தது. அப்பாடானு முதல் பரிசு கிடைச்ச மாதிரி ஜாலியா தூங்க போயிட்டேன். இதுதாங்க நம்ம படக்கதை.


அப்புறம் போட்டியில நம்ம ஓட்டு I_க்கு போட்டிருந்தேன் அதிலே லைட்டிங் நல்ல இருந்தது.



வாக்களித்த எல்லோருக்கும் , குறிப்பிட்டு எழுதியிருந்த ஓசை செல்லா, சர்வேசன் அவர்களுக்கும் மற்றும் உள்ள நம்ம உறவினர் எல்லோருக்கும்........ ரொம்ப நன்றிகன்னா....

Links

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்

இயல்பின் இயல்பு!!!


இயல்பை வெறுத்து


வித்யாசப்படுதலை விரும்பினேன்


இப்பொழுதெல்லாம்..


வித்யாசப்படுதலே இயால்பாய் போனது.

கொஞ்சம் கிளிக்ஸ்

இங்கு சில புகைப்படங்கள் பார்த்ததுண்டு, எனக்கும் அதில் ஆர்வமுண்டு சில உங்கள் பார்வைக்கு
















முதல் வணக்கம்.

வணக்கம், ப்ளாக்கில் எழுதுவது எனக்கு புதிது, நிறைய படித்ததுண்டு. நல்லாவே இருக்கு எவ்வளவு நாள் நல்லாவே இருகிறது அதனால் தான் நம்மலோட என்ட்ரி. பாக்கலாம் ஏதோ நம்மால் முடிந்தது.