த வெ உ புகைப்படப்போட்டி. புகைப்படம் உருவான கதை.

முதலில் போட்டியை அறிவித்த சர்வேசன் அவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற ,நெல்லை சிவா, பெருசு மற்றும் அபர்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

புகைப்படம் எடுக்க கடைசி தினத்தன்று தான் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தேன், வெகு எளிதாகவே இந்த யோசனை சிக்கியது.
ஆணால் புகைப்படம் எடுப்பதில் வெகு சிரமப்பட்டேன். முதலில் முயற்சித்தபோது காய்கறிகள் தண்ணீரில் அமிழாமல் மிதந்தன. பிண்ணர் உருளையை வெட்டி , வெங்காயத்தை மிதக்க விட்டு, அதன் மேல் தக்காளியை மேலிருந்து எறிந்து என சில சோதனை(!)க்கிளிக்குகள் முடிந்தபின் லைட்டிங் பற்றி யோசித்து ஜன்னல் வெளிச்சத்தில் சில கிளிக்குகள்.

மீண்டும் திருப்தியில்லாமல் out door lighting சில கிளிக்குகள்.Background appeal இல்லாமல் போனதால் என்னுடய நீல நிற சட்டையை பின்புறம் வைத்து சில கிளிக்குகள். ஒரு வழியாக முடித்த பின்னர் சிறந்ததாகப்பட்ட இரு படங்களை தேர்வு செய்து போட்டிக்கு கடைசி சில மணி நேரங்களில் அனுப்பிவைத்தால் அங்க வச்சாங்கையா........... ஆப்பு.


படம் நல்லாதான் இருக்கு ஆணால் போட்டி விதிமுறைகளின் படி தவெஉ தவிற எதுவும் இருக்கக்கூடாது ஆகையால் போட்டியில் சேர்க்க இயலாது - என்று திரு. சர்வேசன் பதில் மெயில் அனுப்பினார். ரொம்ப பீல் ஆயிட்டேன். சரி என்ன பன்றது சில மணி நேரங்களில் புதுசா எதுவும் நமக்கு எட்டாது அப்படின்னு முடிவுகட்டி எடுத்த படங்களை என்ன செய்யலாம்னு சோகமா பார்த்துகிட்டு இருந்தேன். சட்டுனு ஒரு யோசனை மின்னல் மாதிறி, இருக்கிற படதிலே crop பண்ணி கிளாஸை எடுத்திட்டா என்ன. வேகமா Crop பண்ணி அனுப்பி வெச்சேன். இந்த முறை "தொடர் முயற்சிகளின் பலனால் உங்கள் புகைப்படம் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது" அப்படின்னு பதில் மெயில் வந்தது. அப்பாடானு முதல் பரிசு கிடைச்ச மாதிரி ஜாலியா தூங்க போயிட்டேன். இதுதாங்க நம்ம படக்கதை.


அப்புறம் போட்டியில நம்ம ஓட்டு I_க்கு போட்டிருந்தேன் அதிலே லைட்டிங் நல்ல இருந்தது.வாக்களித்த எல்லோருக்கும் , குறிப்பிட்டு எழுதியிருந்த ஓசை செல்லா, சர்வேசன் அவர்களுக்கும் மற்றும் உள்ள நம்ம உறவினர் எல்லோருக்கும்........ ரொம்ப நன்றிகன்னா....

Links

Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்