ஆகஸ்ட் மாத புகைபடப்போட்டிக்கு - portraits


தமிழில் புகைப்படக்கலை - அறிவித்துள்ள இந்த மாத போட்டிக்கு ஏற்கனவே படங்கள் வந்து குவிந்துள்ளன, " சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு" ஏற்கனவே புலம்பியாச்சு, சரி இருக்கறத அனுப்புவோம்னு தேடினேன்.

portraits collection எல்லோர்கிட்டேயும் அதிகமா இருக்கும் படங்கள் இதுவாதான் இருக்கும் , எவ்வளவு வகைகள் இதுக்குள்ளே இருக்கு , children s, informal, formal. என்கிட்ட இருந்த படங்களை ஒருவழியா தேத்தி சுமாரான படங்களா ( அப்ப சூப்பரான படங்கள் ? அப்படி எதுவும் இல்லைன்னுதான் இந்த பில்டப்பு) சில படங்கள வரிசை படித்தினேன் இதிலே எது அனுப்பறதுன்னு பெரிய குழப்பம், எதோ இரண்டு படங்களை போட்டிக்குன்னு இங்க வச்சிருக்கேன்.

முதல் படம் very close shot, உணர்வுகளை மட்டும் பிராதானப்படுத்த செபியாவிற்க்கு பிக்காஸா மூலம் மாற்றப்பட்டுள்ளது. lighting கூட நல்ல இருக்கிறமாதிரி இருக்கு.

இரண்டாவது படம் எனக்கு பிடிக்க காரணம் expressions. lighting பிளாட்டா இருந்தாலும் வெகு இயல்பாய் இருந்ததால இந்த படம் செலக்ட் ஆச்சு.

இரண்டு படமும் childrens portraits வகையில் வந்திடிச்சி, குழந்தைகளை படம் பிடிக்கறது அவ்வளவு ஜாலியான விஷயம்.


என்னுடைய மற்ற படங்கள்


என்னுடைய நண்பன், அவனுடைய தாடிக்காக எடுத்தது, தாடிய மட்டும் பிராதனமாக காட்டனும்னு முயற்ச்சி.சும்மா பரிசோதனை முயற்ச்சி.எனக்கு பிடித்த படம். பெரிசா lighting இல்லை என்றாலும் expressions was good.

இன்னும் நிறைய படங்கள் இருக்கு, இன்னொரு பதிவில் பார்க்கலாம், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.