வட்டங்கள்- புகைப்படப்போட்டிக்கு

வணக்கம், ஏற்கனவே போட்டி களைகட்டிடுச்சி, வந்திருக்கும் படங்கள் நடுவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கப்போவது நிச்சயம், வாழ்த்துககள் :-).

வட்டம் தலைப்பை ஒட்டி ஏற்கனவே எடுத்த படங்களில் தேடிய போது ஒன்று இரண்டு இருந்தாலும் , புதிதாக எடுப்பது என்று முடிவு செய்து கேமராவை தூக்கி வட்டங்களை தேடி ஒரு பெரிய வட்டம் அடிச்சாச்சு. ஒரு சில படங்கள் எடுக்க முடியாமல் போயிற்று, இங்கே கொஞ்சம் தொலைவில் இருக்கும் பஞ்சர் கடை வெளியில் மரத்தில்தொங்கும் பழைய டயர்களை எடுக்க நினைத்து முடியாமல் போனது, அதே போல் "பானைகளின் வாய்" எப்பொழுதோ புகை படத்தில் பார்த்தது அந்த கலர் பிடித்தது அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து பானை கிடைக்காமல் தள்ளிப்போனது. வீட்டிற்க்கு வெளியே கொட்டாங்கச்சிகளைப் பார்த்ததும் அதே வண்ணம் போல் தோன்றியது, தண்ணீரில் நனைத்து எடுத்த படம்.

1.


இந்த படம் ஏற்கனவே எடுத்தது. கொஞ்சம் crop செய்து, பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. செலக்டிவ் கலரிங் முறையில் வட்டங்கள் மட்டும் வண்ணத்தில் தெரியும்படி ஜிம்ப்-பில் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.

2.

shuttle badminton எனக்கு பிடித்த விளையாட்டு, அந்த மட்டைகளை வைத்து ஒரு சில கிளிக்குகள் எடுத்ததில் இந்த படம் தேறியது.


3.
ஒட்டு மொத்த படங்களில் எதை அனுப்பவது என்பதில் குழப்பம் இருந்தது ஆனாலும் இந்த கொட்டங்கச்சி படங்களில் எதை அனுப்பவது என்பதில் பெரிய குழப்பம்

4.

எந்த படங்களை அனுப்புவது என்பதில் வந்து போறவங்க கருத்து சொல்லாமே, உங்களுக்கு பிடிச்ச படங்களை சொல்லிட்டு போங்க