எல்லாம் ஒரு விளம்பரம்தான்

வணக்கம்.

கடைசி நேரத்தில் அறக்க பறக்க செய்யறது பழக்கமாயிடுச்சி, இந்த முறையும் அப்படியே. விளம்பரம் தலைப்பு கொஞ்சம் கடினமா இருக்கும்னு நினைச்சேன் ஆன இதுவரை வந்திருக்கிற படங்கள் நம்மளை ரொம்ப குழப்பிடுச்சி. ஒரு சிலர் அட்டகாசமான படங்களுடன் வர, ஒரு சிலர் சாதரன படங்களுடன் அட்டகாசமான சிந்தனைகளுடன் வந்திருக்காங்க. product photography -யா இல்லை advertisement - ஆ அப்படின்னு குழம்பிட்டேன் . இரண்டு பக்கத்திலேயும் நமக்கு பரிசு கிடையாது அப்படிங்கிற அளவுக்கு ஏற்கனவே படங்கள் வந்தாச்சு இருந்தாலும் நம்ம கடமைய நம்ம செய்யனுமே.

1. Signatureநன்பர்களுடன் சுற்றூலா சென்ற போது எடுத்தது. statuary warning கொடுக்க மறந்திட்டேன்.
குடி குடியைக் கெடுக்கும்.குடிப்பழக்கம் நாட்டை கெடுக்கும்.

2. 7up - Refreshingly cool.

7அப் பெட் பாட்டில் தண்ணி ஊத்தி எடுத்தது. அந்த வாசகமும் பாட்டிலிலே இருந்தது.

3. 7-up போட்டிக்கு


2 வது படத்தில் இருந்து crop செய்யப்பட்டது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்து சொல்லிட்டுப் போங்கண்ணா.

10 comments:

said...

நெனச்சேன்....சரக்கு சம்பந்தமா தான் இருக்கும்னு;) கும்முன்னு இருக்கு!

said...

விளம்பரமின்னா இப்படி இருக்கணும்.அருமை.

உங்கள் மெயில் ஐடி தேடி கடைசியில் இங்கேயே கேட்கிறேன்.படங்கள் கொஞ்சம் வலைத்தளத்திற்கு ஓசு கொடுக்கிறது?

www.photocbe.com

said...

//நெனச்சேன்....சரக்கு சம்பந்தமா தான் இருக்கும்னு;) கும்முன்னு இருக்கு!//

ஏன் அப்படி நினைச்சிங்க????????:(
நன்றி சத்தியா.

//விளம்பரமின்னா இப்படி இருக்கணும்.அருமை.

உங்கள் மெயில் ஐடி தேடி கடைசியில் இங்கேயே கேட்கிறேன்.படங்கள் கொஞ்சம் வலைத்தளத்திற்கு ஓசு கொடுக்கிறது?

www.photocbe.com//

நன்றி ராஜ நடராஜன். என்ன படம் வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள். Its my pleasure.

said...

//ஏன் அப்படி நினைச்சிங்க????????:(//
எல்லாம் இரவு நேர போட்டிக்கு நீங்க எடுத்த மது கோப்பை தான் காரணம்.....கண்ணுலையே நிக்குது;)

said...

சத்யா உங்க கேள்விக்கும் அதுக்கு ஒப்பாரி பதிலையும் பாத்த உடனே எனக்கு கரகாட்டக்காரன்ல கார யார் வெச்சிருந்தான்ன மேட்டர்ல

" என்ன பாத்து ஏண்டா அத கேட்ட"ன்னு கவுண்டமணி திருப்பி திருப்பி கேக்கறது ஞாபகம் வந்து தொலச்சுடுச்சு. சிரிப்ப அடக்க முடியல.

said...

ஒப்பாரி முதல் படத்துல natureக்கு மட்டும் பச்சகலர் கொடுத்திருக்கீங்க.
(ஆனா சரக்கு அப்படி ஒண்ணும் நேச்சுரலா இல்லை. வாடை கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா?)
ஆனா ரெண்டும் மூணும் சூப்பர்

said...

//எல்லாம் இரவு நேர போட்டிக்கு நீங்க எடுத்த மது கோப்பை தான் காரணம்.....கண்ணுலையே நிக்குது;)//

//சத்யா உங்க கேள்விக்கும் அதுக்கு ஒப்பாரி பதிலையும் பாத்த உடனே எனக்கு கரகாட்டக்காரன்ல கார யார் வெச்சிருந்தான்ன மேட்டர்ல

" என்ன பாத்து ஏண்டா அத கேட்ட"ன்னு கவுண்டமணி திருப்பி திருப்பி கேக்கறது ஞாபகம் வந்து தொலச்சுடுச்சு. சிரிப்ப அடக்க முடியல.//

எதோ முடிவோடதான் இருக்கீங்க, நடத்துங்க.

said...

//ஒப்பாரி முதல் படத்துல natureக்கு மட்டும் பச்சகலர் கொடுத்திருக்கீங்க.
(ஆனா சரக்கு அப்படி ஒண்ணும் நேச்சுரலா இல்லை. வாடை கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா?)//

இதுல நீதி என்னன்னா விளம்பரத்தை பார்த்து எமாந்திர கூடாது. அப்புறம் இந்த சரக்கு வாடை அடிக்குமா?? எனக்கு என்னங்க தெரியும்.

//ஆனா ரெண்டும் மூணும் சூப்பர்//

நன்றிங்க நந்து.

said...

போட்டிக்கான படம் அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

//போட்டிக்கான படம் அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றிங்க ராமலக்ஷ்மி.