PIT குழுவிற்க்கு கேட்குமா என் ஒப்பாரி

வணக்கம்
இன்னைக்குத்தான் பேருக்கேத்த மாதிரி ஒப்பாரி வைக்க வேண்டியதா போச்சு. என்னத்த சொல்றது செப் 15 கடைசி தேதி தெரிஞ்சு இரவு அனுப்பலாம்னு பார்த்தா நேத்திரவு முழுவதும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இப்போதான் இணைப்பு கிடைச்சது. முடிஞ்சா என்னுடைய படத்தையும் போட்டிக்கு எடுத்துக்கவும்.

1. மகாபலிபுரம் - களங்கரை விளக்கம்




2. மகாபலிபுரம் - ஐந்து ரதம்
3. கடற்கோயில்


4. French War Memorial Pondy- போட்டிக்கான படம்.

7 comments:

said...

ஒப்பாரி கடைசி படம் ஏதோ வெளி நாடு என்று என்ன வைத்து விட்டீர்கள்!!!

மிகவும் அருமை!

said...

ஆ ஹா! எங்கடா காணோமேனு பார்த்தேன்! அருமையான படங்கள்! எனக்கு என்னமோ முதல் படம் தான் அட்டகாசமா இருக்கு! அதையே அனுப்பி இருக்கலாமே?

ஏற்கனவே நீங்க ஜெயிச்சதால உங்களால போன மாசம் பதிவு போட முடியாம போயிடுச்சு, இதையும் விட்டா இந்த மாச பதிவும் இல்லாம போயிடும். போட்டிக்கு ஒரு பதிவை போட்டு உங்கள் வலைப்பூவை நிரப்பிட்டிருக்கீங்க;)

said...

//ஒப்பாரி கடைசி படம் ஏதோ வெளி நாடு என்று என்ன வைத்து விட்டீர்கள்!!!

மிகவும் அருமை!//

நன்றி குசும்பன்


//ஆ ஹா! எங்கடா காணோமேனு பார்த்தேன்! அருமையான படங்கள்! எனக்கு என்னமோ முதல் படம் தான் அட்டகாசமா இருக்கு! அதையே அனுப்பி இருக்கலாமே?

ஏற்கனவே நீங்க ஜெயிச்சதால உங்களால போன மாசம் பதிவு போட முடியாம போயிடுச்சு, இதையும் விட்டா இந்த மாச பதிவும் இல்லாம போயிடும். போட்டிக்கு ஒரு பதிவை போட்டு உங்கள் வலைப்பூவை நிரப்பிட்டிருக்கீங்க;)//

நன்றி @சத்தியா

ஆமாங்க நானும் போன மாதம் போட்டியில்லைன்னு கவலைப்பட்டேன் ஒரு வழியா இந்த மாதம் ஒரு பதிவ போட்டாச்சு

said...

இதோ போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் இன்னொரு ஆள் இருக்கேன் :D

பத்து பேராச்சும் 15 ஆம் தேதி கடைசி நேரத்துலதான் போஸ்ட் போடும் லிஸ்ட்டில்தான் இருக்கோம்.

ஆனா நீங்க மாட்டிகிட்டீங்க :(

PIT போஸ்ட்ல கொடுத்துப்பாருங்க. மூணே மணி நேரம் மட்டும்தானே லேட்?

said...

//இதோ போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் இன்னொரு ஆள் இருக்கேன் :D//

இது நம்ம ஆளு.

//PIT போஸ்ட்ல கொடுத்துப்பாருங்க. மூணே மணி நேரம் மட்டும்தானே லேட்?//

கொடுத்தாச்சு பார்க்கலாம் அதெல்லாம் விடுங்க படத்தை பத்தி ஒன்னும் சொல்லவேயில்லையே.

said...

//படத்தை பத்தி ஒன்னும் சொல்லவேயில்லையே//

எனக்கும் முதல் படத்து மேலதான் லவ்வு. :D

கலர்புல் விஷயங்கள் கொஞ்சம் அதிகமா என்ன அட்ராக்ட் பண்ணுதோன்னு நினைக்கிறேன்.

ஆனாலும் உங்க மீதான எதிர்பார்ப்பு எங்களுக்கு இன்னும் அதிகம். :)

said...

//எனக்கும் முதல் படத்து மேலதான் லவ்வு. :D//

முதல் படம் அழகுதான் இருந்தாலும், அந்த படத்தில் subject அழகு, மேலும் அதில் நிறைய பிற்தயாரிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

கடைசி படம் subject-ஐ விட எடுக்கப்பட்ட கோணம் எனக்கு பிடித்திருந்தது , எந்த பிற்தயாரிப்பும் இல்லை color & contrast மட்டும் adjust செய்திருக்கேன்.

//ஆனாலும் உங்க மீதான எதிர்பார்ப்பு எங்களுக்கு இன்னும் அதிகம். :)//

காதல் படத்தில் வரும் டைரக்டர் சொல்றா மாதிரி இருக்கு.:)))

நன்றிங்க நந்து.