அக்டோபர் மாத PIT போட்டிக்கு
அதிகமா யாரும் தொடத subject food photography தான்னு நினைக்கிறேன், எப்படியோ நான் அதிகமா எடுத்ததில்லை, இதுவரைக்கும் நடந்த போட்டிகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களைதான் அனுப்பியிருந்தேன் முதல் முறை போட்டிக்காக அறிவித்த பின் எடுத்த படங்கள் இவை.
இதுவரை வந்திருக்கிற படங்கள் மிரட்டுகின்றன, இப்பொழுதுதான் நிறைய பேர் வெளியே வர்ராங்க, போட்டி கடுமையாக இருக்கப்போகிறது. ஒரு சிலர் ஆசிரியர்கள் சொன்ன குறிப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி மிக அட்டகாசமான படங்களை எடுத்திருக்காங்க, உ.த.முட்டை மற்றும் அன்னாசி . இப்பதிவிற்க்கு முன் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் என் இந்த படங்களை எடுக்க உதவியாக இருந்தது cvr அவர்களுக்கு நன்றி.
சரி என்னோட படங்களை பார்ப்போம்,
எல்லோறும் சைவ உணவுகளாய் கொடுக்க எனுக்கு அசைவம் எடுத்து பார்க்கலாம் என்று நான் இவைகளை உண்ணும் போது தோன்றியது( அய்யோ நடுவர்கள் சைவமா? அசைவமா தெரியலயே?), ஒட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் சிறிது அலங்காறம் செய்யலாம் என்று எவர்சில்வர் தட்டுக்களை மாற்றி , கருவேப்பிலை தூவி " என்னாதான் செய்யுறான்னு?" அண்ணி விநோதமாக பார்க்க அவசரமாக சில கிளிக்குகள் எடுத்தாச்சு. வேறு சில யோசனைகள் இருந்த போதும் அவைகளை பிறகோர் சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்
1.மீன் குழம்பு , சோறு மற்றும் வறுத்த மீன்
2.வறுத்த மீன்
mmmmmm ம்ம்ம்ம்ம் அப்புறம் என்ன? மீன் சுவையா இருந்தது.
போட்டியில் கலந்துகொண்டவர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.
21 comments:
கவிச்சையா இருந்தாலும் படத்தின் தெளிவுக்காக (sharpness) வாத்தியார்கள் உங்களுக்கு முதல் மார்க் போடலாம்.வாழ்த்துக்கள்.
thank you @ நட்டு
கலக்கல்
நன்றி @ போஸ்டன் பாலா.
//கலக்கல்// எனுக்கும் மத்த படங்களை பார்த்து (வயிறு) கலக்கல் தான்
ஆஹா.
நான் தீர்ப்பு சொல்றதா இருந்தா, வறுத்த மீனுக்கு எல்லா பரிசும் வர மாதிரி சொல்லுவேன் ;)
செய்முறையை தனிப் பதிவா போடவும் :)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், பசிக்குதே.....
:) @ survey san.
நான் செய்யலைங்க, மீன் வருக்க பெரிய செய்முறை வேணுமோ :))
எங்கள் பதிவுகளில் குறிப்பிட்டது போல் சிரத்தை எடுத்து பார்டர் போட்டு,பெயர் எல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.
உங்களை போன்று ஒவ்வொரு முறையும் பங்கு கொள்கிற போட்டியாளர்கள் முயற்சி எடுத்து புதிதாக படம் எடுத்து போட்டிக்கு ஆதரவு தருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!! :-)
thanks @ CVR and the pleasure is mine.
உங்களின் முயற்ச்சிக்கு முன் இவை மிகச்சிறியது.
கலக்கறீங்க ஒவ்வொரு தடவையும்.
சொன்னமாதிரி செய்து பார்டர் எல்லாம் போட்டு நல்ல ஸ்டுடண்டாவும் இருக்கீங்க.
நன்றி @ முத்துலெட்சுமி.
//சொன்னமாதிரி செய்து பார்டர் எல்லாம் போட்டு நல்ல ஸ்டுடண்டாவும் இருக்கீங்க.//
post production படங்களை இன்னும் சிறப்பா காட்டும் என்பதை இரண்டாம் போட்டியிலே தெரிந்து கொண்டேன், நீங்களும் முயன்று பாருங்கள்.
முதல் படத்தில் contrast and brightness சிறிது சரி செய்துள்ளேன் பார்டர் போட்டிருக்கிறேன், ஆணால் crop செய்யாமல் அப்படியே இருக்கு.
இரண்டவது படத்தில் crop செய்து , B&C adjust செய்து பார்டர் சேர்த்துள்ளேன்.
உணவு என்றதும் பெண்களிடம் இருந்து அதிகம் போட்டியிருக்கும் என்று நினைத்தேன், என்னாச்சு இன்னும் நீங்க பதிவு போடவில்லை.
எல்லா படங்களும் அருமை இருக்கு
ஒப்பாரி,
அட்டகாசமான லைட்டிங். கலக்கல். வாழ்த்துக்கள்.
சத்தியா
வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி @ மஞ்சு.
நன்றி @ சத்தியா.
நல்ல படங்கள். இரண்டாவது அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றி @ சதங்கா வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.
அந்த மீன் குளம்பு, சோறு... அட்டகாசம்
ஓப்பாரி ...ஆனந்த கண்ணீர் வடிக்கறீங்களா..? வாழ்த்துக்கள்.
நானா .. இந்த முறை அனுப்பலப்பா..ஒரே வேலை எடுக்கற அளவு மூடு இல்லை..திருப்பி பழச போட மனசு இடங்கொடுக்கலை.. மிஸ் பண்ணது கொஞ்சம் சங்கடம்தான் ஆனால் வேறு வழியில்லை அடுத்த மாசம் வந்திடுவேன்.
@ ஆதி நன்றி & வாழ்த்துக்கள் உங்க நெல்லிக்காயின் வெற்றிக்கு.
@ முத்துலெட்சுமி
சந்தோஷம்தாங்க , போட்டிக்கு வந்த படங்களோட தரத்தை பார்த்தீங்களா, தோல்வி கூட வருத்தப்பட வச்சிருக்காது.
கண்டிப்பா அடுத்த மாதம் போட்டிக்கு வந்திருங்க இன்னும் கொஞ்சம் ஆட்களை காணவில்லை அவ்ங்களும் வருணும்னு எதிர்பார்க்கிறோம்.
ஒப்பாரி
மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது படங்கள் மிகவும் அருமை.
நன்றி.
ஒப்பாரி பின்னீட்டிங்க. வாழ்த்துக்கள்.
ஹாட்டிரிக அடிக்க வாழ்த்துக்கள். ;-)
நன்றி @ சுந்தர் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
நன்றி @ சத்தியா
ஹாட்டிரிக் ஏற்கனவே அடிச்சாச்சு முணு மாசமா முதல் பரிசோ மூன்றாம் பரிசோ பட்டியல்ல தொடர்ந்து இருக்கேனே.
Post a Comment