ஆகஸ்ட் மாத புகைபடப்போட்டிக்கு - portraits


தமிழில் புகைப்படக்கலை - அறிவித்துள்ள இந்த மாத போட்டிக்கு ஏற்கனவே படங்கள் வந்து குவிந்துள்ளன, " சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு" ஏற்கனவே புலம்பியாச்சு, சரி இருக்கறத அனுப்புவோம்னு தேடினேன்.

portraits collection எல்லோர்கிட்டேயும் அதிகமா இருக்கும் படங்கள் இதுவாதான் இருக்கும் , எவ்வளவு வகைகள் இதுக்குள்ளே இருக்கு , children s, informal, formal. என்கிட்ட இருந்த படங்களை ஒருவழியா தேத்தி சுமாரான படங்களா ( அப்ப சூப்பரான படங்கள் ? அப்படி எதுவும் இல்லைன்னுதான் இந்த பில்டப்பு) சில படங்கள வரிசை படித்தினேன் இதிலே எது அனுப்பறதுன்னு பெரிய குழப்பம், எதோ இரண்டு படங்களை போட்டிக்குன்னு இங்க வச்சிருக்கேன்.

முதல் படம் very close shot, உணர்வுகளை மட்டும் பிராதானப்படுத்த செபியாவிற்க்கு பிக்காஸா மூலம் மாற்றப்பட்டுள்ளது. lighting கூட நல்ல இருக்கிறமாதிரி இருக்கு.

இரண்டாவது படம் எனக்கு பிடிக்க காரணம் expressions. lighting பிளாட்டா இருந்தாலும் வெகு இயல்பாய் இருந்ததால இந்த படம் செலக்ட் ஆச்சு.

இரண்டு படமும் childrens portraits வகையில் வந்திடிச்சி, குழந்தைகளை படம் பிடிக்கறது அவ்வளவு ஜாலியான விஷயம்.


என்னுடைய மற்ற படங்கள்


என்னுடைய நண்பன், அவனுடைய தாடிக்காக எடுத்தது, தாடிய மட்டும் பிராதனமாக காட்டனும்னு முயற்ச்சி.சும்மா பரிசோதனை முயற்ச்சி.எனக்கு பிடித்த படம். பெரிசா lighting இல்லை என்றாலும் expressions was good.

இன்னும் நிறைய படங்கள் இருக்கு, இன்னொரு பதிவில் பார்க்கலாம், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

19 comments:

said...

எனக்கு என்னவோ, கடைசிப் படம் ரொம்ப பிடிச்சிருக்கு

said...

நன்றி போஸ்டன் பாலா, எனக்கும் பெரிய குழப்பம்தான் , என்ன செய்ய எதொ அனுப்பியாச்சு.

said...

4th will be nicer with some cropping

1st model good, pic not very impressive
2nd pic is good, model is not impressive
3rd looks odd

:)

said...

//சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு// not only you, many have already started feeling the same after seeing some wonderful entries for the competition. Winning is not important, particiaption is what is necessary.

And I forgot, your photos are also good. Wish you good luck.

said...

நான் ஒன்னும் சொல்லக்கூடாது.. ஆனா ஒரு படம் போட்டி போடுது! வாழ்த்துக்கள்!

said...

நன்றி சர்வேசன்.

நன்றி இளவரசன், எவ்வளவு அழகான படங்கள்.

நன்றி செல்லா பின்னூட்டம் வெளியிடலாமா வேண்டாமான்னு யோசிச்சேன், போட்டிதானே போடுதுன்னு வெளியிட்டாச்சு இதுவே பெரிய சந்தோஷம்தான்.

said...

1st pic is gud. Andha left kaadhum cut aagama vanthirunthaa innum super'aa irunthirukkum!!

said...

கடைசிப் படம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

said...

முதல் படதுக்கு பரிசு கிடைச்சிருக்கு... வாழ்த்துக்கள்

said...

போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

பாராட்டுகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள். 3 ஆம் இடம் பிடித்து விட்டீர்கள். அடுத்து முதல் இடம் தான்.

போட்டியில் கலந்துகொண்டவன்.

said...

வாழ்த்துக்கள்

said...

நன்றி தீபா. எதிர்பார்க்கவில்லை சந்தோஷமா இருக்கு.

நன்றி அனானி வாழ்த்து சொல்ல கூடவா அனானி ஆப்ஷன் பெயர் சொல்லுங்களேன்

வாங்க சுந்தர் , சும்மா வந்ததற்க்காக சொல்றேனு நினைக்காதீங்க, உங்க படம் நிச்சயமா பரிசு வாங்கும்னு நினைச்சேன், இப்போ இல்ல போட்டியில கலந்து கொள்வதற்க்கு முன் இந்த படம் கலந்துக்கலாமான்னு பின்னுட்டத்தில் கேட்டீங்களே அப்பவே. அந்த பதிவுல வந்த எல்லா படமும் அருமை. வாழ்த்துக்கள்.

said...

நன்றி Mrs.முத்துலெட்சுமி

said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....


@ஒப்பாரி: ரொம்பலாம் வித்தியாசம யோசிக்குறேன் பேர்வழினு இல்லாம , இயல்பா தட்டீட்டு போய்டீங்க... உண்மையான சிரிப்பு.. அழகானது..

said...

கலக்கிட்டீங்க.பயங்கர போட்டிதான் போங்க. வாழ்த்துக்கள்.

said...

நன்றி யாத்ரீகன். படத்தில் என்ன ஷ்பெஷ்ல்னு செல்லா சொல்வார். எனக்கு பிடித்தது lighting and expression and sepia.

Sathia thanks. கண்டிப்பா ஜெயிக்கும்னு நினைச்சேன்.

said...

முதல் படம் classic ரகங்க. ஓசை செல்லா சொன்னாமாதிரி expressions படத்தை எங்கேயோ கொண்டு போயிடுச்சு.

வாழ்த்துக்கள் அய்யா!

said...

நன்றி இளவரசன்.

அய்யாவா!!!! :(