PIT குழுவிற்க்கு கேட்குமா என் ஒப்பாரி

வணக்கம்
இன்னைக்குத்தான் பேருக்கேத்த மாதிரி ஒப்பாரி வைக்க வேண்டியதா போச்சு. என்னத்த சொல்றது செப் 15 கடைசி தேதி தெரிஞ்சு இரவு அனுப்பலாம்னு பார்த்தா நேத்திரவு முழுவதும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இப்போதான் இணைப்பு கிடைச்சது. முடிஞ்சா என்னுடைய படத்தையும் போட்டிக்கு எடுத்துக்கவும்.

1. மகாபலிபுரம் - களங்கரை விளக்கம்




2. மகாபலிபுரம் - ஐந்து ரதம்
3. கடற்கோயில்


4. French War Memorial Pondy- போட்டிக்கான படம்.

இரவு நேர புகைப்படங்கள் - PIT ஜூலை மாத போட்டிக்கு

வணக்கம்.

ஜூலை மாத போட்டிக்கு இரவு நேர புகைப்படங்கள் தலைப்பு கொடுத்திருக்காங்க, அநேகமாக எல்லாரும் முன்னரே முயற்சி செய்திருப்பார்கள் ஆனாலும் மாதிரிப்படங்கள் பிரமிப்பூட்டின. சரி மாதிரிப்படங்கள்தான் இப்படி என்றால் இது வரை வந்திருக்கும் படங்கள் இன்னும் ஆச்சர்யம், ஆனது ஆச்சு இப்படியே ஆச்சர்யப்பட்டு நின்னா நம்ம படம் இல்லாமலே போட்டி முடிஞ்சிரும் , அதான் வந்தாச்சு

முதல் படம்




திருவிழாவில் கரகாட்டத்தின் போது எடுத்தது. இந்த திருவிழாவை புகைப்பட ஆவணமாக எடுக்க முயற்சித்து சில படங்கள் எடுத்தேன், அதில் ஒன்று இந்த கரகாட்டப்படம்.

2. சிலம்பாட்டம்

அதே திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்.

3.மதுக்கோப்பை

போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, முழுஇருட்டில் ஒற்றை மெழுகுவர்த்தியின் துணை கொண்டு எடுத்தது
4. மதுவுடன் கோப்பை

இது PP special . படம் எடுத்த போது கோப்பையில் மது இல்லை பின்னர் போட்டோஷாப் துணை கொண்டு கோப்பையில் மது ஊற்றப்பட்டது.


படங்கள் பார்த்தாச்சா உங்களுக்கு பிடித்த படத்தையும் சொல்லிட்டு போங்க. போட்டிப்படத்தை தேர்வு செஞ்சாச்சு என்றாலும் சிறு குழப்பம் இருக்கு உங்க கருத்தையும் தெரிஞ்சிகனும்னு இருக்கேன்.

அப்புறம் நடுவர் குழுவிற்க்கு பாராட்டுக்கள், குறிப்பாக zoho creater அதிலிருக்கும் judges comments column இனி அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எதிர்பார்க்கலாம். நன்றி தீபா. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜூன் மாத போட்டிக்கு - தினப்படி வேலைகள்

வணக்கம்,

தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சில

முதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளி



இரண்டாவது படம் உயரத்தில் welding செய்யும் தொழிலாளிகள், உயரத்தை காமிப்பதற்க்கு crop செய்யாமலும், கொஞ்சம் underexpose - உம் செய்யப்பட்டிருக்கிறது





மூன்றாவது பீச்சில் சோன்பப்டி விற்க்கும் சிறுவன்போட்டியாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜோடிகள் - PIT போட்டிக்கு

வணக்கம்

ஜோடிகள் போட்டிக்கு எதை எதையோ எடுக்க நினைச்சு , கடைசியில் எதை எதையோ எடுத்தாச்சு

1. Speakers -

வீட்டிலிருக்கும் speakers எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது, போட்டிக்கு ஒரு படம் என்பது, தேர்வில் கடினமா இருந்தது இருந்தாலும் இதையே தேர்வு செய்கிறேன்.

2. கடற்கறை ஜோடி

முன்பெப்பொழுதோ மிகவும் தற்செயலாக எடுக்கப்பட்ட படம், slow shutter -லா படம் கொஞ்சம் blur ஆகியிருக்கு இருந்தாலும் தலைப்புக்கு பொருத்தமா இருக்கா மாதிரி தோன்றியது.

3, ஜோடி நாற்காளிகள்



போடியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்கள் சொல்லிட்டு போங்க.

தனியே தன்னந்தனியே - தனிமை PIT போட்டி

வணக்கம்
வித்தியாசமான தலைப்பு என்றாலும் நல்ல படங்களை கொடுத்திருக்காங்க, இன்னும் நிறைய ஜாம்பவான்கள் வரவேயில்லை இப்பவே கண்ணை கட்டுது. எது எப்படியிருந்தாலும் நம்ம படம் அனுப்பியாகனுமே அதுதான் கிழே


ஏற்கனவே எடுத்த படம் கொஞ்சம் மெருகேத்தி போட்டிருக்கேன்.

பிடிக்குதோ பிடிக்கலையோ கருத்து சொல்லிடுங்க. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

எனது HDR படமும் உருவாக்கப்பட்ட பிரதிபலிப்பும்

வணக்கம்


பிரதிபலிப்பு போட்டி பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறது.

போட்டி அறிவிப்பில் செயற்கையாக பிரதிபலிப்புகளை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்க்கான முயற்ச்சியில் கிடைத்த விபரீதம்தான் கிழே உள்ள படம்,

முதல் படம் HDR மூலம் உருவாக்கப்பட்ட படம்





2. முதல் படத்தை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்க்கை பிரதிபலிப்பு

கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமான முயற்சி குறைகளையும் கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.

மார்ச் மாத போட்டிக்கு - பிம்பிலிக்கா பிலேப்பி

வணக்கம்

மார்ச் மாத போட்டிக்கு reflections தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம், சரி புதிதாக எதையும் எடுக்க முடியாமலப் போகவே ஏற்கனவே எடுத்த படங்களில் இருந்து போட்டிக்கு


1. எது உண்மை எது பிம்பம்.
நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் தேங்கியிருந்த மழை நீரில் தெரிந்த பிம்பம்.


2. Helmet.




இந்த படம் நான் பாண்டி ( ஆரோவில்) சென்றிருந்தபோது எடுத்தது, ஏறகனவே ஒரு PeeVee யின் helmet படம் போட்டியில் இருந்தாலும், எனக்கு பிடித்த படம். it was not planned or arranged , அந்த நொடியில் பார்த்ததும் எடுத்தது, இன்னும் கொஞ்சம் crop செய்யலாம் இருந்தாலும் பைக் மற்றும் பையின் பகுதிகள் இருந்தா அழகா இருக்கும்போல தொணிச்சு.

3.Objects in this mirror are closer than they appear


பைக் கண்ணாடியில் தெரிந்த பிம்பம்.


எற்கனவே போட்டிக்கு வந்த படங்கள் சும்மா நறுக்குன்னு இருக்கு, அதற்குள்ளாகவே அருமையான படங்களின் அணிவகுப்பு, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கருதுக்களை விரும்புகிறேன்.