இரவு நேர புகைப்படங்கள் - PIT ஜூலை மாத போட்டிக்கு
வணக்கம்.
ஜூலை மாத போட்டிக்கு இரவு நேர புகைப்படங்கள் தலைப்பு கொடுத்திருக்காங்க, அநேகமாக எல்லாரும் முன்னரே முயற்சி செய்திருப்பார்கள் ஆனாலும் மாதிரிப்படங்கள் பிரமிப்பூட்டின. சரி மாதிரிப்படங்கள்தான் இப்படி என்றால் இது வரை வந்திருக்கும் படங்கள் இன்னும் ஆச்சர்யம், ஆனது ஆச்சு இப்படியே ஆச்சர்யப்பட்டு நின்னா நம்ம படம் இல்லாமலே போட்டி முடிஞ்சிரும் , அதான் வந்தாச்சு
முதல் படம்
திருவிழாவில் கரகாட்டத்தின் போது எடுத்தது. இந்த திருவிழாவை புகைப்பட ஆவணமாக எடுக்க முயற்சித்து சில படங்கள் எடுத்தேன், அதில் ஒன்று இந்த கரகாட்டப்படம்.
2. சிலம்பாட்டம்
அதே திருவிழாவில் எடுக்கப்பட்ட படம்.
3.மதுக்கோப்பை
போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, முழுஇருட்டில் ஒற்றை மெழுகுவர்த்தியின் துணை கொண்டு எடுத்தது
4. மதுவுடன் கோப்பை
இது PP special . படம் எடுத்த போது கோப்பையில் மது இல்லை பின்னர் போட்டோஷாப் துணை கொண்டு கோப்பையில் மது ஊற்றப்பட்டது.
படங்கள் பார்த்தாச்சா உங்களுக்கு பிடித்த படத்தையும் சொல்லிட்டு போங்க. போட்டிப்படத்தை தேர்வு செஞ்சாச்சு என்றாலும் சிறு குழப்பம் இருக்கு உங்க கருத்தையும் தெரிஞ்சிகனும்னு இருக்கேன்.
அப்புறம் நடுவர் குழுவிற்க்கு பாராட்டுக்கள், குறிப்பாக zoho creater அதிலிருக்கும் judges comments column இனி அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எதிர்பார்க்கலாம். நன்றி தீபா. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
16 comments:
படம் ஒன்று இருளில் வ(வி)டிந்த காவியம்.
படம் மூன்றோ ஒளியில் தீட்டிய ஓவியம்.
போட்டி முடிவை அறிவதிலான ஆர்வம் உங்கள் தேர்வு இதிலே என்னவென்று அறிவதிலும் ஏற்படுகிறது. சரி காத்திருக்கிறோம்.
third pic very nic
//படம் ஒன்று இருளில் வ(வி)டிந்த காவியம்.
படம் மூன்றோ ஒளியில் தீட்டிய ஓவியம்.
போட்டி முடிவை அறிவதிலான ஆர்வம் உங்கள் தேர்வு இதிலே என்னவென்று அறிவதிலும் ஏற்படுகிறது. சரி காத்திருக்கிறோம்.//
நன்றி @ ராமலக்ஷ்மி , என்னுடைய குழப்பமும் அதுதான்.
//third pic very nic//
நன்றி thigalmillir.
I sent third pic for the competition.looking forward to the comments on my selection.
"காவியமா இல்லை ஓவியமா" எனப் பாடி ஒருபடியாக ஓவியம்தான் என முடிவாகி விட்டது போலிருக்கிறதே. வாழ்த்துக்கள்.
மூன்றாவது படம் அருமை! ரொம்ப நல்லா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!
Thanks @ ramalakshmi & sathiya
படத்த பாத்ததும் மப்பு ஏறுதுங்க ஒப்பாரி :)
ஃபார்முக்கு வந்துட்டீங்க
//படத்த பாத்ததும் மப்பு ஏறுதுங்க ஒப்பாரி :)
ஃபார்முக்கு வந்துட்டீங்க//
நன்றிங்க நந்து. எதோ நீங்க சொல்றீங்க, நான் எப்பவும் போலத்தான் எடுத்திருக்கேன்.
எப்பாஆஆஆ... தூள்!
//எப்பாஆஆஆ... தூள்!//
வேறு என்ன பரிசு வேணும். நன்றிங்க பாஸ்டன் பாலா.
நான்கு படங்களும் அருமை.
காமிராக் கவிதைக்கு வாழ்த்துக்கள்.
படம் மூன்று முத்தின் ஒளி போல
பரிசு பெற வாழ்த்துக்கள்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
please visit my blog.
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 31 மறுமொழிகள் | விஜய்
நன்றிங்க விஜய்.
cograts
t.vijay
thanks vijay
Post a Comment