புகைப்படப்போட்டிக்கு - ஜனவரி மாதம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதம் சுத்தியிருக்கிற பொருட்களை அழகான கோணங்களில் பார்ப்பதற்க்கு வாய்ப்பாக எளிமையான தலைப்பா கொடுதிருக்காங்க ஏற்கனவே நிறைய படங்களை எடுத்து வைத்திருந்தேன் ஒரு சில படங்களை போட்டி அறிவித்த பின்னர் எடுத்தேன்.

1.கலையும் சிலையும்


லென்ஸ் மூடி , சிலை. அந்த Nikon lid சிலையின் அளவிற்க்கான ஒப்பீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படக்கலைஞர்களுக்கு புகைபடப்பெட்டி கடவுளும் கூட.

2. Ready for the battle. போட்டிக்கு தயாராய் அணிவகுத்து

ஒரு மாலை வேளையில் DOF technic முயற்சி செய்துகொண்டிருந்த போது
எடுத்த படம் பிக்காசா மூலம் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.


3. I am very much focused.


இதிலிருக்கும் DOF was achieved through lens only. பிக்காசா மூலம் desaturate செய்யப்பபட்டிருக்கு.
4. Ear Phone.
இந்த படம் போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, நாதஸ் அவர்களின் படங்களை பார்த்ததும் முயற்சி செய்து பார்கணும்னு தோணிச்சு.

5. Philips Video Player Inspired by Nathas Pictures

ஏற்கனவே சொன்ன மாதிரி , போட்டிப்படங்களை பார்த்து எடுத்தது.

6. இறகுப்பந்து, மட்டை

தினமும் விளையாடனும் இல்லையென்றால் எதோ குறைந்தாற்போல் இருக்கும்.இந்த படம் எனக்குப் பிடித்த படம் but I lost the original. flickr page -ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. it wasn't cropped , thats the original composition.

இந்த படங்கள் போட்டி தலைப்பிற்க்கு பொருத்தமான படங்களா என்பதை நடுவர்கள் சொன்னா பரவாயில்லை.

எந்த படங்களை தேர்வு செய்வது என்பதில் மீண்டும் குழப்பம் பார்த்து உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டு போங்க.

பூக்கள் - டிசம்பர் மாத போட்டிக்கு

பூக்கள், டிசம்பர் மாத போட்டிக்கு தலைப்பை பார்த்தவுடன் இந்த பூக்கள் ஞாபகம் வந்துவிட்டது பூக்களின் பெயர்கள் தெரியாது மஞ்சள் , ஆரஞ்சு நிறத்தில் பூக்கும் நான் தினமும் வழியில் பார்த்து புகைப்படம் எடுக்க நினைத்ததுன்டு , PIT மூலம் நிறைவேறியது பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது


முதல் படம் என் ஜீன்ஸ் பேன்ட் மீது வைத்து கொஞ்சம் வானமும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.


1.

நிறைய கிளிக்கியதில் தேறியவைகள் கிழே உள்ள படங்கள் எதை தேர்வு செய்வது என்பது தெரியலை யோசனை சொல்லுங்களேன்

2.

3.



4.



5.



6.

roads - நவம்பர் மாத போட்டிக்கு

நான் சாலைகளை அதிகம் எடுத்ததில்லை , புதுசா நிறைய பதிவர்கள் வந்து கலக்கியிருக்காங்க அவர்களின் படங்களின் தரத்திற்கு சான்று பதிவாசிரியர் செல்லாவே களம்மிறங்கியிருப்பது ;).மிக அழகான படங்களை காணமுடிகிறது அணைவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட முயற்சிகள்

புகைப்படம் 1 - Mr.Strong
சென்னையில் எடுக்கப்பட்டது, இரவு நேரம் , ஒரு பேரூந்து நிறுத்தத்தில்
எடுக்கப்பட்டது, பின்னர் செபியாவிற்கு மாற்றப்பட்டு கொஞ்சமாக பிற்தயாரிப்பு செய்யப்பட்டது.கடைசி படமும் எனக்கு பிடித்தது என்றாலும் நடுவில் வரும் வாகன ஒளி உறுத்தவே முதல் படத்தை தேர்வு செய்தேன்.

















புகைப்படம் 2-சைக்கிள்

கிராமத்து சாலையில் எடுத்தது. மாலை நேரம்.











சென்னை எழும்பூர், இரவு நேரம்.












Mr.Strong 2.















வாழ்த்துக்கள் .

அக்டோபர் மாத PIT போட்டிக்கு

அதிகமா யாரும் தொடத subject food photography தான்னு நினைக்கிறேன், எப்படியோ நான் அதிகமா எடுத்ததில்லை, இதுவரைக்கும் நடந்த போட்டிகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களைதான் அனுப்பியிருந்தேன் முதல் முறை போட்டிக்காக அறிவித்த பின் எடுத்த படங்கள் இவை.

இதுவரை வந்திருக்கிற படங்கள் மிரட்டுகின்றன, இப்பொழுதுதான் நிறைய பேர் வெளியே வர்ராங்க, போட்டி கடுமையாக இருக்கப்போகிறது. ஒரு சிலர் ஆசிரியர்கள் சொன்ன குறிப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி மிக அட்டகாசமான படங்களை எடுத்திருக்காங்க, உ.த.முட்டை மற்றும் அன்னாசி . இப்பதிவிற்க்கு முன் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் என் இந்த படங்களை எடுக்க உதவியாக இருந்தது cvr அவர்களுக்கு நன்றி.

சரி என்னோட படங்களை பார்ப்போம்,

எல்லோறும் சைவ உணவுகளாய் கொடுக்க எனுக்கு அசைவம் எடுத்து பார்க்கலாம் என்று நான் இவைகளை உண்ணும் போது தோன்றியது( அய்யோ நடுவர்கள் சைவமா? அசைவமா தெரியலயே?), ஒட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் சிறிது அலங்காறம் செய்யலாம் என்று எவர்சில்வர் தட்டுக்களை மாற்றி , கருவேப்பிலை தூவி " என்னாதான் செய்யுறான்னு?" அண்ணி விநோதமாக பார்க்க அவசரமாக சில கிளிக்குகள் எடுத்தாச்சு. வேறு சில யோசனைகள் இருந்த போதும் அவைகளை பிறகோர் சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

1.மீன் குழம்பு , சோறு மற்றும் வறுத்த மீன்


























2.வறுத்த மீன்


















mmmmmm ம்ம்ம்ம்ம் அப்புறம் என்ன? மீன் சுவையா இருந்தது.

போட்டியில் கலந்துகொண்டவர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

PIT September Contest _ colours

Sorry for posting in English.



Here is my pic for colours



onion1



ஆகஸ்ட் மாத புகைபடப்போட்டிக்கு - portraits


தமிழில் புகைப்படக்கலை - அறிவித்துள்ள இந்த மாத போட்டிக்கு ஏற்கனவே படங்கள் வந்து குவிந்துள்ளன, " சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு" ஏற்கனவே புலம்பியாச்சு, சரி இருக்கறத அனுப்புவோம்னு தேடினேன்.

portraits collection எல்லோர்கிட்டேயும் அதிகமா இருக்கும் படங்கள் இதுவாதான் இருக்கும் , எவ்வளவு வகைகள் இதுக்குள்ளே இருக்கு , children s, informal, formal. என்கிட்ட இருந்த படங்களை ஒருவழியா தேத்தி சுமாரான படங்களா ( அப்ப சூப்பரான படங்கள் ? அப்படி எதுவும் இல்லைன்னுதான் இந்த பில்டப்பு) சில படங்கள வரிசை படித்தினேன் இதிலே எது அனுப்பறதுன்னு பெரிய குழப்பம், எதோ இரண்டு படங்களை போட்டிக்குன்னு இங்க வச்சிருக்கேன்.

முதல் படம் very close shot, உணர்வுகளை மட்டும் பிராதானப்படுத்த செபியாவிற்க்கு பிக்காஸா மூலம் மாற்றப்பட்டுள்ளது. lighting கூட நல்ல இருக்கிறமாதிரி இருக்கு.

இரண்டாவது படம் எனக்கு பிடிக்க காரணம் expressions. lighting பிளாட்டா இருந்தாலும் வெகு இயல்பாய் இருந்ததால இந்த படம் செலக்ட் ஆச்சு.

இரண்டு படமும் childrens portraits வகையில் வந்திடிச்சி, குழந்தைகளை படம் பிடிக்கறது அவ்வளவு ஜாலியான விஷயம்.






என்னுடைய மற்ற படங்கள்


என்னுடைய நண்பன், அவனுடைய தாடிக்காக எடுத்தது, தாடிய மட்டும் பிராதனமாக காட்டனும்னு முயற்ச்சி.



















சும்மா பரிசோதனை முயற்ச்சி.



























எனக்கு பிடித்த படம். பெரிசா lighting இல்லை என்றாலும் expressions was good.





இன்னும் நிறைய படங்கள் இருக்கு, இன்னொரு பதிவில் பார்க்கலாம், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புகைப்படப்போட்டி - விடுபட்டவை

புகைப்படப்போட்டிக்கு விளம்பரம் தேவையில்லை , அதில் கலந்துகொள்வதே எனக்கு விளம்பரம்தான். பிட்டு போதும் விசயத்திற்க்கு வருவோம் போட்டியில் கலந்துக்கனும்னு முடிவு பன்னதும் ஏற்கனவே என்கிட்ட இருந்த புகைப்படங்களில் தேட ஆரம்பிச்சேன்.

எனக்கு ஒரளவுக்கு நல்லதா பட்டதை 4 படங்கள் தேர்வு செஞ்சேன், அதில் எதை அனுப்புவதுன்னு கொழம்பி கடைசியா போட்டிக்கு இந்த பதிவில் உள்ள படங்களை அனுப்பினேன் புகைப்படப்போட்டி - இயற்கை.

போட்டிக்கு அனுப்பியவை



விடுபட்டவை






இந்த இரண்டு படங்களை நான் தேர்வு செய்யாதிற்க்கு காரணம் நான் தேர்வு செய்த இரண்டு படங்களிலும் ஒரே கருப்பொருள் (subject .: either tree or sea) இருக்கக்கூடாது என்பதால்தான் .

நீங்க சொல்லுங்க எந்த படத்தை அனுப்பியிருக்கலாம்? ஏன்?