தனியே தன்னந்தனியே - தனிமை PIT போட்டி

வணக்கம்
வித்தியாசமான தலைப்பு என்றாலும் நல்ல படங்களை கொடுத்திருக்காங்க, இன்னும் நிறைய ஜாம்பவான்கள் வரவேயில்லை இப்பவே கண்ணை கட்டுது. எது எப்படியிருந்தாலும் நம்ம படம் அனுப்பியாகனுமே அதுதான் கிழே


ஏற்கனவே எடுத்த படம் கொஞ்சம் மெருகேத்தி போட்டிருக்கேன்.

பிடிக்குதோ பிடிக்கலையோ கருத்து சொல்லிடுங்க. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

எனது HDR படமும் உருவாக்கப்பட்ட பிரதிபலிப்பும்

வணக்கம்


பிரதிபலிப்பு போட்டி பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறது.

போட்டி அறிவிப்பில் செயற்கையாக பிரதிபலிப்புகளை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்க்கான முயற்ச்சியில் கிடைத்த விபரீதம்தான் கிழே உள்ள படம்,

முதல் படம் HDR மூலம் உருவாக்கப்பட்ட படம்





2. முதல் படத்தை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்க்கை பிரதிபலிப்பு

கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமான முயற்சி குறைகளையும் கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.

மார்ச் மாத போட்டிக்கு - பிம்பிலிக்கா பிலேப்பி

வணக்கம்

மார்ச் மாத போட்டிக்கு reflections தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம், சரி புதிதாக எதையும் எடுக்க முடியாமலப் போகவே ஏற்கனவே எடுத்த படங்களில் இருந்து போட்டிக்கு


1. எது உண்மை எது பிம்பம்.
நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் தேங்கியிருந்த மழை நீரில் தெரிந்த பிம்பம்.


2. Helmet.




இந்த படம் நான் பாண்டி ( ஆரோவில்) சென்றிருந்தபோது எடுத்தது, ஏறகனவே ஒரு PeeVee யின் helmet படம் போட்டியில் இருந்தாலும், எனக்கு பிடித்த படம். it was not planned or arranged , அந்த நொடியில் பார்த்ததும் எடுத்தது, இன்னும் கொஞ்சம் crop செய்யலாம் இருந்தாலும் பைக் மற்றும் பையின் பகுதிகள் இருந்தா அழகா இருக்கும்போல தொணிச்சு.

3.Objects in this mirror are closer than they appear


பைக் கண்ணாடியில் தெரிந்த பிம்பம்.


எற்கனவே போட்டிக்கு வந்த படங்கள் சும்மா நறுக்குன்னு இருக்கு, அதற்குள்ளாகவே அருமையான படங்களின் அணிவகுப்பு, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கருதுக்களை விரும்புகிறேன்.

வட்டங்கள்- புகைப்படப்போட்டிக்கு

வணக்கம், ஏற்கனவே போட்டி களைகட்டிடுச்சி, வந்திருக்கும் படங்கள் நடுவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கப்போவது நிச்சயம், வாழ்த்துககள் :-).

வட்டம் தலைப்பை ஒட்டி ஏற்கனவே எடுத்த படங்களில் தேடிய போது ஒன்று இரண்டு இருந்தாலும் , புதிதாக எடுப்பது என்று முடிவு செய்து கேமராவை தூக்கி வட்டங்களை தேடி ஒரு பெரிய வட்டம் அடிச்சாச்சு. ஒரு சில படங்கள் எடுக்க முடியாமல் போயிற்று, இங்கே கொஞ்சம் தொலைவில் இருக்கும் பஞ்சர் கடை வெளியில் மரத்தில்தொங்கும் பழைய டயர்களை எடுக்க நினைத்து முடியாமல் போனது, அதே போல் "பானைகளின் வாய்" எப்பொழுதோ புகை படத்தில் பார்த்தது அந்த கலர் பிடித்தது அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து பானை கிடைக்காமல் தள்ளிப்போனது. வீட்டிற்க்கு வெளியே கொட்டாங்கச்சிகளைப் பார்த்ததும் அதே வண்ணம் போல் தோன்றியது, தண்ணீரில் நனைத்து எடுத்த படம்.

1.


இந்த படம் ஏற்கனவே எடுத்தது. கொஞ்சம் crop செய்து, பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. செலக்டிவ் கலரிங் முறையில் வட்டங்கள் மட்டும் வண்ணத்தில் தெரியும்படி ஜிம்ப்-பில் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.

2.

shuttle badminton எனக்கு பிடித்த விளையாட்டு, அந்த மட்டைகளை வைத்து ஒரு சில கிளிக்குகள் எடுத்ததில் இந்த படம் தேறியது.


3.
ஒட்டு மொத்த படங்களில் எதை அனுப்பவது என்பதில் குழப்பம் இருந்தது ஆனாலும் இந்த கொட்டங்கச்சி படங்களில் எதை அனுப்பவது என்பதில் பெரிய குழப்பம்

4.

எந்த படங்களை அனுப்புவது என்பதில் வந்து போறவங்க கருத்து சொல்லாமே, உங்களுக்கு பிடிச்ச படங்களை சொல்லிட்டு போங்க

புகைப்படப்போட்டிக்கு - ஜனவரி மாதம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதம் சுத்தியிருக்கிற பொருட்களை அழகான கோணங்களில் பார்ப்பதற்க்கு வாய்ப்பாக எளிமையான தலைப்பா கொடுதிருக்காங்க ஏற்கனவே நிறைய படங்களை எடுத்து வைத்திருந்தேன் ஒரு சில படங்களை போட்டி அறிவித்த பின்னர் எடுத்தேன்.

1.கலையும் சிலையும்


லென்ஸ் மூடி , சிலை. அந்த Nikon lid சிலையின் அளவிற்க்கான ஒப்பீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படக்கலைஞர்களுக்கு புகைபடப்பெட்டி கடவுளும் கூட.

2. Ready for the battle. போட்டிக்கு தயாராய் அணிவகுத்து

ஒரு மாலை வேளையில் DOF technic முயற்சி செய்துகொண்டிருந்த போது
எடுத்த படம் பிக்காசா மூலம் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.


3. I am very much focused.


இதிலிருக்கும் DOF was achieved through lens only. பிக்காசா மூலம் desaturate செய்யப்பபட்டிருக்கு.
4. Ear Phone.
இந்த படம் போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, நாதஸ் அவர்களின் படங்களை பார்த்ததும் முயற்சி செய்து பார்கணும்னு தோணிச்சு.

5. Philips Video Player Inspired by Nathas Pictures

ஏற்கனவே சொன்ன மாதிரி , போட்டிப்படங்களை பார்த்து எடுத்தது.

6. இறகுப்பந்து, மட்டை

தினமும் விளையாடனும் இல்லையென்றால் எதோ குறைந்தாற்போல் இருக்கும்.இந்த படம் எனக்குப் பிடித்த படம் but I lost the original. flickr page -ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. it wasn't cropped , thats the original composition.

இந்த படங்கள் போட்டி தலைப்பிற்க்கு பொருத்தமான படங்களா என்பதை நடுவர்கள் சொன்னா பரவாயில்லை.

எந்த படங்களை தேர்வு செய்வது என்பதில் மீண்டும் குழப்பம் பார்த்து உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டு போங்க.

பூக்கள் - டிசம்பர் மாத போட்டிக்கு

பூக்கள், டிசம்பர் மாத போட்டிக்கு தலைப்பை பார்த்தவுடன் இந்த பூக்கள் ஞாபகம் வந்துவிட்டது பூக்களின் பெயர்கள் தெரியாது மஞ்சள் , ஆரஞ்சு நிறத்தில் பூக்கும் நான் தினமும் வழியில் பார்த்து புகைப்படம் எடுக்க நினைத்ததுன்டு , PIT மூலம் நிறைவேறியது பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது


முதல் படம் என் ஜீன்ஸ் பேன்ட் மீது வைத்து கொஞ்சம் வானமும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.


1.

நிறைய கிளிக்கியதில் தேறியவைகள் கிழே உள்ள படங்கள் எதை தேர்வு செய்வது என்பது தெரியலை யோசனை சொல்லுங்களேன்

2.

3.



4.



5.



6.

roads - நவம்பர் மாத போட்டிக்கு

நான் சாலைகளை அதிகம் எடுத்ததில்லை , புதுசா நிறைய பதிவர்கள் வந்து கலக்கியிருக்காங்க அவர்களின் படங்களின் தரத்திற்கு சான்று பதிவாசிரியர் செல்லாவே களம்மிறங்கியிருப்பது ;).மிக அழகான படங்களை காணமுடிகிறது அணைவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட முயற்சிகள்

புகைப்படம் 1 - Mr.Strong
சென்னையில் எடுக்கப்பட்டது, இரவு நேரம் , ஒரு பேரூந்து நிறுத்தத்தில்
எடுக்கப்பட்டது, பின்னர் செபியாவிற்கு மாற்றப்பட்டு கொஞ்சமாக பிற்தயாரிப்பு செய்யப்பட்டது.கடைசி படமும் எனக்கு பிடித்தது என்றாலும் நடுவில் வரும் வாகன ஒளி உறுத்தவே முதல் படத்தை தேர்வு செய்தேன்.

















புகைப்படம் 2-சைக்கிள்

கிராமத்து சாலையில் எடுத்தது. மாலை நேரம்.











சென்னை எழும்பூர், இரவு நேரம்.












Mr.Strong 2.















வாழ்த்துக்கள் .