அக்டோபர் மாத PIT போட்டிக்கு
அதிகமா யாரும் தொடத subject food photography தான்னு நினைக்கிறேன், எப்படியோ நான் அதிகமா எடுத்ததில்லை, இதுவரைக்கும் நடந்த போட்டிகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களைதான் அனுப்பியிருந்தேன் முதல் முறை போட்டிக்காக அறிவித்த பின் எடுத்த படங்கள் இவை.
இதுவரை வந்திருக்கிற படங்கள் மிரட்டுகின்றன, இப்பொழுதுதான் நிறைய பேர் வெளியே வர்ராங்க, போட்டி கடுமையாக இருக்கப்போகிறது. ஒரு சிலர் ஆசிரியர்கள் சொன்ன குறிப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி மிக அட்டகாசமான படங்களை எடுத்திருக்காங்க, உ.த.முட்டை மற்றும் அன்னாசி . இப்பதிவிற்க்கு முன் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் என் இந்த படங்களை எடுக்க உதவியாக இருந்தது cvr அவர்களுக்கு நன்றி.
சரி என்னோட படங்களை பார்ப்போம்,
எல்லோறும் சைவ உணவுகளாய் கொடுக்க எனுக்கு அசைவம் எடுத்து பார்க்கலாம் என்று நான் இவைகளை உண்ணும் போது தோன்றியது( அய்யோ நடுவர்கள் சைவமா? அசைவமா தெரியலயே?), ஒட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் சிறிது அலங்காறம் செய்யலாம் என்று எவர்சில்வர் தட்டுக்களை மாற்றி , கருவேப்பிலை தூவி " என்னாதான் செய்யுறான்னு?" அண்ணி விநோதமாக பார்க்க அவசரமாக சில கிளிக்குகள் எடுத்தாச்சு. வேறு சில யோசனைகள் இருந்த போதும் அவைகளை பிறகோர் சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்
1.மீன் குழம்பு , சோறு மற்றும் வறுத்த மீன்
2.வறுத்த மீன்
mmmmmm ம்ம்ம்ம்ம் அப்புறம் என்ன? மீன் சுவையா இருந்தது.
போட்டியில் கலந்துகொண்டவர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.